இந்தியா: திருப்பூர் ஆடை தொழிலாளர்களுக்கு அதிகப்படியான குறைந்த பட்ச ஊதிய கோரிக்கை

இந்தியாவின் தமிழ்நாடு, திருப்பூரில் உள்ள உலகளாவிய ஆடை (கார்மெண்ட்) விநியோகச் சங்கிலியில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நியாயமான ஊதியம், சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்பான வேலை சூழல்கள் மற்றும் பிற சட்டப்பூர்வ உரிமைகளுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் போராடும் தொழிற்சங்கங்களின் குழுவுடன் இணைந்து: பனியன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் (இந்திய தொழிற்சங்கங்களின் மையம் CITU), இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) ஆகியவை இதில் அடங்கும்.

உலகின் மிகப்பெரிய பிராண்டுகள் மற்றும் ஃபாஸ்ட்-ஃபேஷன் லேபிள்களை வழங்கும் திருப்பூரில் (இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் ) சுமார் 600,000 (ஆறு  இலட்சம்) ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
ஆடைத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் மற்றும் மே மாதத்தில் நடந்த சமீபத்திய திருத்தத்தை எதிர்க்கிறோம். தமிழ்நாடு அரசு 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நவம்பர் 2023 இல், அதுவும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் இழுக்கப்பட்ட பிறகு, குறைந்தபட்ச ஊதியத்தில் ஒரு 'வரைவு' திருத்தத்தை அறிவித்தது (சட்டப்படி ஐந்தாண்டிற்கு மிகாமல் இருக்க வேண்டும்). ஆனால், இந்த ஆண்டு மே மாத இறுதி உத்தரவில், அதைவிடக் குறைவான  ஊதியத்தையே அறிவித்தது. அரசாங்கம் தந்திரமாக குறைவான குறைந்தபட்ச ஊதியத்தில் உள்ள 'அகவிலைப்படி' (அல்லது பணவீக்கத்திற்கான இழப்பீடு) கணக்கிடும் முறையை மாற்றி, 50% குறைத்துள்ளது. மாநில அரசாங்கத்தின் மற்றொரு தந்திரம், முதலாளிகளின் 'லாபிக்கு' அடிபணிந்து, 2016 முதல் 'தையல் தொழில்' மற்றும் ' ஹொசைரி நிட்வெர் உற்பத்தி' ஆகியவற்றிற்கு வெவ்வேறு குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை நிர்ணயித்துள்ளது. 2018ல் தொழிலாளர்கள் நலனுக்கு விரோதமான சட்ட திருத்தத்தையும் செய்தது. நிட்வெர்  ஆடைகளைத் தயாரிக்கும் அனைத்து முதலாளிகளும், குறைவான  குறைந்தபட்ச ஊதிய துறையைச் சேர்ந்தவர்கள் (அதாவது, ஹொசைரி நிட்வெர் உற்பத்தியில்) என்ற அறிவிப்பு இதை சாத்தியமாக்கியுள்ளது. இந்த போலியான வேறுபாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இரண்டாவதாக, ஏற்கனவே மிகவும் தாமதமாகிவிட்ட 'வரைவு' திருத்தத்தை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். மூன்றாவதாக, குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்தில் முத்தரப்பு, வெளிப்படையான செயல்முறையை கண்டிப்பாக பின்பற்றுமாறும் அரசை கேட்டுக்கொள்கிறோம். நான்காவது, அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ.26,000 (US$310) ஆக இருக்க வேண்டும், இது இன்று தொழிலாளர் குடும்பங்களின் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளை மட்டுமே உள்ளடக்கும்.


நீங்கள் உதவலாம்! உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தின் கீழே உள்ள 'செய்தி அனுப்பு' என்பதைக் கிளிக் செய்யவும்.

பெயர்:
[தேவை]
மின்னஞ்சல் முகவரி:
[தேவை]
உங்கள் தொழிற்சங்கம்:
உங்கள் நாடு:
உங்கள் செய்தியை இங்கே தட்டச்சு செய்யவும் - அல்லது ஏற்கனவே உள்ள செய்தியைப் பயன்படுத்தவும்.


Stop spam!
Enter the number 5516 here:

Thank you


எங்களிடமிருந்து எதிர்கால அவசர நடவடிக்கை எச்சரிக்கைகளைப் பெற விரும்புகிறீர்களா?

Yes :
No :







உங்கள் செய்தி பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்படும்:
cmo@tn.gov.in, minister_labour@tn.gov.in, labsec@tn.gov.in, com.tnlabour@nic.in, prgsampath@gmail.com